ஊடுருவலை கார்கிலுடன் ஒப்பிடுவதா? கோபப்படுகிறார் ராணுவ தளபதி
ஸ்ரீநகர்: காஷ்மீரில், கேரன் செக்டரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை கார்கில்
ஊடுருவலுடன் ஒப்பிடக்கூடாது என ராணுவ தலைமை தளபதி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின்
குப்வாரா மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கேரன் செக்வரி்ல
உள்ள ஒரு கிராமத்திற்குள் 30 முதல் 40 -க்கும் மேற்பட்டபயங்கரவாதிகள்
ஊடுருவி கடந்த 11 நாட்களாகஅக்கிராமத்தினைஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்பகுதியை,எல்லை பாதுகாப்புப்படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர்
சுற்றி வளைத்து கடந்த 11 நாட்களாக கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி,
விரட்டியடிக்க முயற்சித்து வருகின்றனர். இன்று வரை நிலவரப்படி இரு
பயங்கரவாதிகள் சு்ட்டுக்கொல்லப்பட்டனர்.ஆனாலும் அங்கு
ஓயாமல்துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அப்பகுதி கிராமவாசிகள்
தெரிவிக்கின்றனர்.
காஷ்மீர் சட்டசபையில் அமளி
தற்போது காஷ்மீர்
சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஊருவல் விவகாரத்தினை
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கையில் எடுத்தனர். ஊடுருவல் தொடர்பாக மத்திய
அரசு உரிய பதில் தர வேண்டும் எனவலியுறுத்தினர்.இந்த ஊடுருவல் விவகாரத்தினை,
கார்கி்ல் ஊடுருவலுடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியாகி வரும்
நிலையில்,எல்லையில் நடக்கும் மோதல்கள் குறித்ததகவலை மத்திய அரசு
வெளியிடாமல் உள்ளது.
கார்கிலுடன் ஒப்பிடுவதா?
இந்த பரபரப்பான
சூழ்நிலையில் ராணுவ தலைமை தளபதிபிக்ரம்சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், கேரன் செக்டர் பகுதியில்ராணுவம் தொடர்ந்து பதிலடி
கொடுத்து வருகிறது. இந்த சம்பவத்தை1999-ம் ஆண்டு கார்கில் ஊடுருவலுடன்
ஒப்பிடுவது சரியல்ல. ஊடுருவிய பயங்கரவாதிகளைசுட்டுத்தள்ளராணுவத்தினர் முழு
மூச்சுடன்தீவிரம காட்டிவருகின்றனர்.விரைவில் இது முடிவுக்கு வரும் என்றார்.
இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவ முயன்றபயங்கரவாதிகளை,
பாதுகாப்புப்படையினர் தாக்கி வருவதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.
No comments:
Post a Comment